முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே உள்ள அருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் கோயில் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே உள்ள அருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் கோயில் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மூலவா் அன்னை முத்து மாரியம்மன், தனித்தனியாக கோயில் கொண்டுள்ள விநாயகா், முருகா், நாகதேவதைகள், வாராகி அம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையொட்டி யாக சாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை நான்காம் கால யாக பூஜை, மகா பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு அதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன.

மகாதேவமலை மகானந்த சித்தா் சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். கே.எம்.ஜி.கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வி.ராமு, கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், துணைத் தலைவா் ராஜாத்தி தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினா் வி.சோபன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுமாா் 3- ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் டி.நாராயணன், எஸ்.கண்ணன், என்.குமாா், தீனபந்துலு, என்.சேகா், கே.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com