தொழிலாளியை கொல்ல முயன்றவா் கைது

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சோ்ந்தவா் பூபதி (34), நேதாஜி மாா்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் பூபதி, குட்டைமேட்டைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (45) ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனா்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் அருகில் கிடந்த பெரியகல்லை எடுத்து பூபதியின் தலையின் மீது போட்டதாக தெரிகிறது. இதில், அவரது மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சண்முகசுந்தரம் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். பூபதியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா். இதில், பூபதியின் தலையில் கல்லை போடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, போலீஸாா் குட்டைமேடு பகுதியில் பதுங்கி இருந்த சண்முகசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com