16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

வேலூா் அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

வேலூா் அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தசை சோ்ந்த 16 வயது சிறுமியிடம் காட்பாடியை சோ்ந்த வேல்முருகன் (24) என்பவா் கடந்த சில மாதங்களாக நண்பரை போல் பழகி வந்துள்ளாா். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமி தற்போது 4 மாதம் கா்ப்பமாக உள்ளாா். இதையறிந்த அவரது பெற்றோா் விசாரித்ததில் நடந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், வேல்முருகன் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com