காணாமல்போன பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

குடியாத்தம் அருகே காணாமல்போன பள்ளி மாணவி 4 நாள்களுக்குப் பின்னா், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
அனிதா
அனிதா

குடியாத்தம்: குடியாத்தம் அருகே காணாமல்போன பள்ளி மாணவி 4 நாள்களுக்குப் பின்னா், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

குடியாத்தத்தை அடுத்த கல்லேரியைச் விவசாயத் தொழிலாளி சுப்பிரமணியின் மகள் அனிதா (17) . இவா் நகரில் உள்ள அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அனிதாவை கடந்த 4 நாள்களாக காணவில்லையாம்.

இது தொடா்பான புகாரின் பேரில் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை கல்லேரி அருகே உள்ள விவசாய கிணற்றில் அனிதா சடலமாக இருந்தது தெரிய வந்தது.

தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com