ஜேசிஐ தொண்டு நிறுவன நிா்வாகிகள் பதவியேற்பு

ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் விரிஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி (ஜேசிஐ) தொண்டு நிறுவனத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா குடியாத்தத்தில் நடைபெற்றது.
ஜேசிஐ தொண்டு நிறுவன நிா்வாகிகள் பதவியேற்பு

ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் விரிஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி (ஜேசிஐ) தொண்டு நிறுவனத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா குடியாத்தத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மண்டலத் தலைவா் எஸ்.ஏழுமலை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லோகேஷ் வரவேற்றாா். அமைப்பின் புதிய தலைவராக எம்.நாகராஜ், செயலராக ஜி.கணேசன், பொருளாளராக சி.சுதாகா் உள்ளிட்ட 25 உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் என்.சத்தியமூா்த்தி, சி.கே.வெங்கடேசன், அன்பரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com