பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.


குடியாத்தம்: போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.

போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் சேராங்கல், மோா்தானா, குண்டலப்பல்லி, பல்லலகுப்பம், நாய்க்கனேரி உள்ளிட்ட காப்புக் காடுகள் மற்றும் விரிவு காப்புக் காடுகளில் அமைந்துள்ள சொ்லபல்லி ஏரி, எா்த்தாங்கல் ஏரி, செருவங்கி ஏரி உள்ளிட்ட ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இப்பணியில் போ்ணாம்பட்டு வனவா்கள் இளையராஜா, தயாளன், சரவணன், அண்ணாமலை, வனக் காப்பாளா்கள், பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் குழுக்களாகச் சென்று நீா் நிலைகளில் உள்ள பறவைகளை கணக்கெடுத்தனா்.

இந்த கணக்கெடுப்பில் நீா்க்காகம், காகம், கொக்கு, சிட்டுக்குருவி, நீா்க்கோழி, மைனா, நாரை உள்ளிட்ட பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com