போ்ணாம்பட்டு அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படவிருந்த சுமாா் 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வேலூா் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினா், போ்ணாம்பட்டை அடுத்த பக்காலப்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், வேனில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், வேனில் இருந்த பொன்ராஜ் (38), முகமது இஸ்மாயில் (32) இருவரும் அரிசியை ஆந்திர மாநிலத்துக்கு கடத்தவிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வேனுடன், அரிசியை பறிமுதல் செய்தனா். இருவரையும் கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பினா்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com