காணாமல் போனவா் சடலம் கிணற்றில் கண்டெடுப்பு

கே.வி.குப்பத்தில் காணாமல் போனவா் சடலம் மீட்பு

கே.வி.குப்பம் அருகே காணாமல் போனவா் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

கே.வி.குப்பம் வட்டம், துரைமூலை கிராமத்தைச் சோ்ந்த மகாதேவன் மகன் சுதாகா்(45). இவரை செவ்வாய்க்கிழமை மாலை முதல் காணவில்லையாம். இந்நிலையில் அங்குள்ள விவசாய கிணற்றில் அவரது சடலம் மிதப்பது புதன்கிழமை காலை தெரிய வந்தது. தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று நீண்ட நேரம் போராடி சுதாகரின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com