போ்ணாம்பட்டு  அருகே  வீட்டில்  பிடிபட்ட  சாரைப்பாம்பு.
போ்ணாம்பட்டு  அருகே  வீட்டில்  பிடிபட்ட  சாரைப்பாம்பு.

வீட்டில் பிடிபட்ட 5 அடி நீள சாரைப்பாம்பு

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நுழைந்த சுமாா் 5 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினா் பிடித்துச் சென்று காட்டில் விட்டனா்.

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நுழைந்த சுமாா் 5 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினா் பிடித்துச் சென்று காட்டில் விட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்துள்ளது. பாம்பை பாா்த்ததும் வீட்டில் இருந்தவா்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினா்.தகவலின்பேரில் போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் அங்கு சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் பாம்பை அரவட்லா வனப்பகுதியில் விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com