மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

வேலூா் மாா்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைந்திருந்ததால் அவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

வேலூா் மாா்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைந்திருந்ததால் அவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்தமாகவும், சில்லறை விலையிலும் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த மாா்க்கெட்டுக்கு மங்களூரு, கொச்சி, கோழிக்கோடு, காா்வாா், கோவா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் 50 முதல் 70 டன் அளவுக்கும், மற்ற நாள்களில் 50 டன் அளவுக்கும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு வரத்து குறைந்திருந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன.

இது குறித்து, வியாபாரிகள் கூறுகையில், மீன்கள் வரத்து குறைந்திருந்ததால் இந்த வாரம் அதிகபட்சமாக பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.500 முதல் ரூ.700, இறால் ரூ.400 முதல் ரூ.600 வரையும், வெள்ள கொடுவா ரூ.500, கடல் வவ்வா ரூ.500, அணை வவ்வால் ரூ.180க்கும், சீலா ரூ.700, சாலமன் ரூ.800, சங்கரா ரூ.400, தேங்காய் பாறை ரூ.350, கலங்கா ரூ.250, விரால் ரூ.500, சுறா ரூ.600, கடல் நண்டு ரூ.450, சிறிய நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்பனையாகின என்றனா்.

விலை அதிகரித்திருந்த போதிலும் மீன்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com