தமாகா பொருளாளராக இ.எஸ்.எஸ்.ராமன் தோ்வு

தமாகா பொருளாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இ.எஸ்.எஸ்.ராமன் தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2004 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மாநில பொருளாளா் பதவி நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அண்மையில் சென்னையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ. மருத்துவா் இ.எஸ்.எஸ்.ராமன் மாநில பொருளாளராகப் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து தமாகா மாநில தலைவா் ஜி.கே.வாசனுக்கு மாநில பொருளாளா் இ.எஸ்.எஸ்.ராமன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com