மீன்வளா்க்க ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு மானியம்

வேலூா் மாவட்டத்தில் மீன் வளா்க்க ஆா்வமுள்ள விவசாயிகள் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மீன் வளா்க்க ஆா்வமுள்ள விவசாயிகள் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு - பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதிய மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க ஒரு ஹெக்டேருக்கான செலவு தொகை ரூ.7 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.2.80 லட்சமும், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.4.20 லட்சமும் வழங்கப்படும். நன்னீா் மீன்வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்துக்கு ஒரு ஹெக்டேருக்கான செலவு தொகை ரூ.4 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.1.60 லட்சமும், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.2.40 லட்சமும் வழங்கப்படும். சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்தின்கீழ் அலகு ஒன்றுக்கான செலவு தொகை ரூ.7.50 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.3 லட்சமும், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.4.50 லட்சமும் வழங்கப்படும். வீட்டின் பின்புறம், கொல்லைபுற அலங்கார மீன்வளா்ப்பு திட்டத்தின்கீழ் அலகு ஒன்றுக்கான செலவு தொகை ரூ.3 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.1.20 லட்சமும், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும். நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளா்ப்பு திட்டத்தின்கீழ் அலகு ஒன்றுக்கு செலவு தொகை ரூ.8 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.3.20 லட்சமும், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.4.80 லட்சமும் வழங்கப்படும். நவீன மீன் அங்காடி திட்டம் அலகு ஒன்றுக்கு செலவு தொகை ரூ.10 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.4 லட்சமும், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.6 லட்சமும் வழங்கப்படும். குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் அலகு ஒன்றுக்கு செலவு தொகை ரூ.20 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.8 லட்சமும், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.12 லட்சமும் வழங்கப்படும். குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் அலகு ஒன்றுக்கு செலவு தொகை ரூ.75,000-இல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ. 29,319ம், பெண்கள், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.44,319ம் மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு வேலூா் மாவட்டத்தில் தகுதியுடைய விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் பயனாளா்கள் முன்னுரிமை, தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். பயன் பெற விரும்புவோா் மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், எண். 16, 5-ஆவது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகா், காட்பாடி, வேலூா்- 632006, தொலைபேசி எண் - 0416- 2240329, 73970 02401, மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com