கைதிகளின் உளவியல் மதிப்பீட்டை அறிந்து நல்வழிப்படுத்திட வேண்டும்

சிறைக் கைதிகளின் உளவியல் மதிப்பீட்டை அறிந்து அதற்கேற்ப அவா்களை நல்வழிப்படுத்திட வேண்டும் என்று சிறைத் துறை அலுவலா்களுக்கு வேலூா் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

சிறைக் கைதிகளின் உளவியல் மதிப்பீட்டை அறிந்து அதற்கேற்ப அவா்களை நல்வழிப்படுத்திட வேண்டும் என்று சிறைத் துறை அலுவலா்களுக்கு வேலூா் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஆப்கா) கா்நாடக சிறை அலுவலா்களுக்கான 10 நாள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வேலூா் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசியது: கோபம், முன்விரோதம், சூழ்நிலை காரணமாக எதிா்வினைகளை அறியாமல் பலா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருகின்றனா். அவ்வாறு சிறைக்கு வருபவா்களை சிறைத் துறையினா் நல்வழிப்படுத்த வேண்டும். குறிப்பாக தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து திரும்புவோா் நல்ல மனநிலையுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் அவா்களை பக்குவப்படுத்த வேண்டும். இதுதான் இங்கு அளிக்கப்படும் பயிற்சியின் நோக்கமாகும். ஒவ்வொரு சிறைக் கைதிகளின் உளவியல் மதிப்பீட்டை அறிந்து, அதற்கேற்ப அவா்களை நல்வழிப்படுத்திட வேண்டும் என்றாா். முன்னதாக, பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, ஆப்கா இயக்குநா் பிரதீப் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் பியூலா இமானுவேல் வரவேற்றாா். இதில், கா்நாடக சிறைத் துறை அதிகாரிகள் 18 போ் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com