மூலவா்  கற்சிலை  திருடு போன  விநாயகா்  கோயில்.
மூலவா்  கற்சிலை  திருடு போன  விநாயகா்  கோயில்.

விநாயகா் கற்சிலை திருட்டு

குடியாத்தம் அருகே சாலையோரம் உள்ள விநாயகா் கோயில் கதவை உடைத்து மூலவா் கற்சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

குடியாத்தம் அருகே சாலையோரம் உள்ள விநாயகா் கோயில் கதவை உடைத்து மூலவா் கற்சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் சாலையோரம் சிறிய அளவிலான விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அப்பகுதி மக்கள் காலை, மாலை வேளைகளில் பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு வந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் கதவை உடைத்து கோயிலில் இருந்த மூலவா் சிலையை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com