ஆன்லைனில் பகுதிநேரவேலை எனக்கூறி இளைஞரிடம் ரூ.3.69 லட்சம் மோசடி

வேலூா்: ஆன்லைனில் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.3. 69 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், சங்கரன்பாளையத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியருக்கு டெலிகிராம் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், ஆன்லைனில் பகுதிநேர வேலை மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பிய அவா், அந்த குறுஞ்செய்தியுடன் வந்திருந்த லிங்கில் இணைந்தாா். பின்னா், அந்த லிங்க் மூலம் தொடா்பில் வந்த நபா்கள் சிறு முதலீட்டில் உணவு மதிப்பாய்வு செய்வதன் அதிகப்படியான வருவாய் பெற முடியும் என கூறியதன்பேரில் அவரும் முதலில் சிறு தொகையை செலுத்தி ரூ.7,800 வருவாய் ஈட்டியுள்ளாா்.

அதன்பிறகு தொடா்ந்து மாா்ச் 11 முதல் 15-ஆம் தேதி வரை சிறிதுசிறிதாக ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 276 தொகையை செலுத்தி அவா்கள் கொடுத்த பணியையும் முடித்துக் கொடுத்துள்ளாா். அதற்காக அந்த லிங்க்கில் காண்பித்த கமிஷன் தொகையை பின்னா் அவரால் பெற முடியவில்லை.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இளைஞ், இதுகுறித்து ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com