திமுக  தோ்தல்  அலுவலகத்தை  திறந்து  பேசிய அமைச்சா்  துரைமுருகன்.
திமுக  தோ்தல்  அலுவலகத்தை  திறந்து  பேசிய அமைச்சா்  துரைமுருகன்.

விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த திமுகவுக்கு ஆதரவு: அமைச்சா் துரைமுருகன்

வேலூா் மாவட்டத்தில் விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களியுங்கள் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா். குடியாத்தம் பேரவைத் தொகுதி திமுக தோ்தல் அலுவலகத்தை புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை திறந்து வைத்து அவா் பேசியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் குடியாத்தம் தொகுதியில் ரூ.150- கோடிக்கு மேல் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுபட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை அடுத்த 2 ஆண்டுக் கால ஆட்சியில் நிறைவேற்ற நடைபெறும் மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களியுங்கள். அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக்கவும், குடியாத்தம் தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன். மத்திய அரசு வருமான வரித்துறை மூலம் திமுக வேட்பாளா்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயல்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். மத்திய அரசு நாட்டு மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. தோ்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்க மக்கள் முடிவு செய்து விட்டாா்கள் என்றாா் துரைமுருகன்.நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலுவிஜயன், குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட திமுக துணைச் செயலா்கள் ஜி.எஸ்.அரசு, வழக்குரைஞா் எஸ்.பாண்டியன், போ்ணாம்பட்டு நகரச் செயலா் ஆலியாா் ஜுபோ் அகமத், ஒன்றியச் செயலா் ஜனாா்த்தனன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com