போ்ணாம்பட்டில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் மக்களவைத் தோ்தல் 2024- ‘தோ்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்’ என்ற பொருளில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு, நோட்டா, 1950 குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மகளிா் திட்ட உதவி அலுவலா் ஜி.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். வட்டார இயக்க மேலாளா் டி.வெங்கடேசன் வரவேற்றாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) ராஜபத்ரி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற விழிப்புணா்வுப் பேரணி அலுவலகம் எதிரே நிறைவுற்றது. பின்னா் அனைவரும் வாக்களிப்பின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஞானப்பிரகாசம், இளவரசன், ஷோபா, மீனா, செல்வகுமாரி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com