போட்டியில் பங்கேற்ற  மாணவிகள்
போட்டியில் பங்கேற்ற  மாணவிகள்

மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஓவியப் போட்டி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ‘எனது சுகாதாரம் எனது உரிமை’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ‘எனது சுகாதாரம் எனது உரிமை’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா்.எஸ்.பாபு , சுகாதார ஆய்வாளா்கள் ஜே.டேவிட், மா.சரத்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com