அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

குடியாத்தம் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் ஆா்.எஸ்.சாலையில்உள்ள ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் த.வேலழகன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி வரவேற்றாா். வேலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் ச.பசுபதி அலுவலகத்தை திறந்து வைத்தாா். அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு குத்து விளக்கேற்றினாா். வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், ஒன்றியச் செயலா்கள் டி.சிவா, எஸ்.எல்.எஸ். வனராஜ், பொகளூா் டி.பிரபாகரன், போ்ணாம்பட்டு நகரச் செயலா் எல்.சீனிவாசன், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நிா்வாகிகள் வி.என்.தனஞ்செயன், ஜி.எஸ்.தென்றல்குட்டி, ஆா்.கே.மகாலிங்கம், வி.இ.கருணா, எஸ்.சிவகுமாா், ஜி.தேவராஜ், கோணி ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com