ஏ.சி.சண்முகம் குடும்பத்துக்கு ரூ. 152.77 கோடி சொத்து

வேலூா் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோா் பெயரில் மொத்தம் ரூ. 152 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 818 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசையும் சொத்து: ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 36 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 921 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 37 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரத்து 259 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன. இதில், ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 55,601, வங்கியிருப்பு ரூ. 94 லட்சத்து 64 ஆயிரத்து 43, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ. 30 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 440, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 3 கோடியே 93 லட்சத்து 65 ஆயிரத்து 337, நகைகள் ரூ. 78 லட்சத்து 66 ஆயிரத்து 500-ம், அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 85,480, வங்கியிருப்பு ரூ. 1 கோடியே 17 லட்சத்து ஓா் ஆயிரத்து 780, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ. 26 கோடியே 85 லட்சத்து 27 ஆயிரத்து 492, காப்பீட்டு முதலீடு ரூ. 41 லட்சத்து 12 ஆயிரத்து 499, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 7 கோடியே 69 லட்சத்து 14 ஆயிரத்து 908, நகைகள் ரூ. 1 கோடியே 27 லட்சத்து 8 ஆயிரத்து 100-ம் அடங்கும்.

அசையா சொத்துகள்: விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பூா், திருச்சி, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 40 கோடியே 13 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 28 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.

விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் (வணிக வளாகங்கள் உள்பட) ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 1 கோடியே 85 லட்சத்து 88 ஆயிரத்து 400 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 8 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 500 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன. கடன் மதிப்பு: ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 17 கோடியே 72 லட்சத்து 48 ஆயிரத்து 122 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 11 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரத்து 55 மதிப்பிலும் கடன் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com