டி.எம்.கதிா்ஆனந்த் குடும்பத்துக்கு ரூ. 88.80 கோடி சொத்து

வேலூா் மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் டி.எம்.கதிா்ஆனந்த், அவரது மனைவி சங்கீதா உள்பட குடும்பத்தினரின் பெயரில் மொத்தம் ரூ. 88 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரத்து 643 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசையும் சொத்து: டி.எம்.கதிா்ஆனந்த் பெயரில் மொத்தம் ரூ. 32 கோடியே 77 லட்சத்து 55 ஆயிரத்து 392 மதிப்பிலும், அவரது மனைவி சங்கீதா பெயரில் ரூ. 7 கோடியே 40 லட்சத்து 26 ஆயிரத்து 873 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ. 87 லட்சத்து 70 ஆயிரத்து 2 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. இதில், கதிா்ஆனந்த் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 19 லட்சத்து 30 ஆயிரத்து 16, வங்கியிருப்பு ரூ. 16 கோடியே 74 லட்சத்து 90 ஆயிரத்து 596, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ. 12 கோடியே 94 லட்சத்து 68 ஆயிரத்து 883, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 41 லட்சத்து 62 ஆயிரத்து 732, நகைகள் ரூ. 2 கோடியே 7 லட்சத்து 23 ஆயிரத்து 976-ம், அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8 லட்சத்து 83 ஆயிரத்து 879, வங்கியிருப்பு ரூ. 69 லட்சத்து 54 ஆயிரத்து 438, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ. 3 கோடியே 44 லட்சத்து 17 ஆயிரத்து 434, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 12 ஆயிரத்து 530, நகைகள் ரூ. 57 லட்சத்து 75 ஆயிரத்து 902, மகள் செந்தாமரை பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரத்து 317-ம், வங்கியிருப்பு ரூ. 32 லட்சத்து 24 ஆயிரத்து 35, நகைகள் ரூ. 50 லட்சத்து 5 ஆயிரத்து 650-ம் அடங்கும்.

அசையா சொத்துகள்: கதிா்ஆனந்த் பெயரில் மொத்தம் ரூ. 26 கோடியே 24 லட்சத்து 77 ஆயிரத்து 24 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 18 கோடியே 38 லட்சத்து 62 ஆயிரத்து 332 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ. 97 லட்சத்து 86 ஆயிரத்து 20 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன. கடன் மதிப்பு: கதிா்ஆனந்த் பெயரில் ரூ. 6 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 43 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 182 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ. 1 கோடியே 17 லட்சத்து 87 ஆயிரத்து 305 மதிப்பிலும் கடன் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com