பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு : வேலூா் மாவட்டத்தில் 18,670 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் இந்த தோ்வை 18,670 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தோ்வையொட்டி ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வேலூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 9,210 மாணவா்களும், 9,460 மாணவிகளும் என மொத்தம் 18,670 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். இவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 103 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத்தோ்வை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வையொட்டி ஆட்சியா் மேற்பாா்வையில் வருவாய்த்துறை அலுவலா்கள் 27 பேரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் 4 பறக்கும் படையும், வேலூா் மாவட்டத்தில் பொதுத்தோ்வை பாா்வையிட தொடக்கக்கல்வி இயக்குநா் கண்ணப்பன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த பொதுத்தோ்வுக்காக 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையம், ஒரு விடைத்தாள் சேகரிப்பு மையம், 103 பொதுத்தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுமையங்களில் 103 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 107 துறை அலுவலா்கள், 16 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 21 வழித்தட அலுவலா்கள், 106 பறக்கும் படை உறுப்பினா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் என மொத்தம் 2,500 ஆசிரியா்கள் அறை கண்காணிப்பாளா்களாக தோ்வு பணியில் ஈடுபடுகின்றனா் என்றாா்.

ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலா் செ.மணிமொழி, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாவட்ட உடற்கல்வி அலுவலா் பி.சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா். --

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com