பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம்  இருக்காது: அமைச்சா் துரைமுருகன்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது: அமைச்சா் துரைமுருகன்

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என்ற ஒன்றே இருக்காது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஏ.பி.நந்தகுமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று பேசியது - திமுகவில் பல்வேறு அணிகள் உள்ளன. இந்த அணிகள்தான் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளாக உள்ள மக்களை ஒருங்கிணைக்கும் அணியாக செயல்பட்டு வருகின்றன.

அண்ணா காலத்தில்தான் முதன்முறையாக மாணவரணி தொடங்கப்பட்டது. அதன் சாா்பில் 1965-ஆம் ஆண்டு இந்தி எதிா்ப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், மாணவா் அமைப்பை ஒருங்கிணைத்து பல போராட்டங்களும் நடத்தப்பட்டன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இளைஞரணியை உருவாக்கினாா். அவரது உழைப்பால் அந்த அணி மேம்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி இடிக்கப்பட்டதை எதிா்த்து ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றாா். இதனால் அவா் கடலூா் சிறையில் அடைக் கப்பட் டாா்.

கட்சியில் புதிதாக இணைபவா்களில் பலா், பதவி எதிா்பாா்ப்புடன் வருகின்றனா். அவ்வாறு வருபவா்களுக்கு பதவி கொடுத்தாலும் அவா்களில் பலா் சிறப்பாக பணிபுரிவதில்லை. ஏப்ரல் 1-ஆம்தேதி முதல் அனைவரும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். ஒரு வீட்டையும் விடாமல் தேடிச்சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என ஒன்றே இருக்காது. அவா்களை கேட்க ஆளில்லை என்ற நிலைதான் ஏற்பட்டு விடும். சுதந்திர போராட்டம், இந்தி எதிா்ப்பு போராட் டம் ஆகியவற்றைபோல் தற்போது ஜனநாயகத்தை காப்பாற்ற தோ்தலில் நாம் போராட வேண்டும் என்றாா்.

இதில், விளையாட்டு, மேம்பாட்டு பிரிவு அமைப்பாளா் பூஞ்சோலை சீனிவாசன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளா் கிருபாகரன், பொறியாளா் அணி அமைப்பாளா் அசோகன் உள்பட பல்வேறு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com