ஜல்லி லாரிகளால் சாலைகள் சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

ஜல்லி, மண் லாரிகள் அதிகளவில் இயக்கப்படுவதால் சாலைகள் பெருமளவில் சேதமடைந்து வருவதாக குற்றஞ்சாட்டி வேலூா் ரங்காபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வேலூரை அடுத்த ரங்காபுரத்தில் இருந்து செங்காநத்தம் செல்லும் சாலையில் உள்ள மாதா கோயில் தெரு வழியாக ஜல்லி, மண் உள்ளிட்ட அதிக பாரம் கொண்ட லாரிகள் பெருமளவில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், குடியிருப்புகளும், பொது மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும், அதனால் அப்பகுதியில் அதிக பாரம் கொண்ட லாரிகளின் போக்குவரத்தை தடை செய்யவும் வலியுறுத்தி ரங்காபுரம் - செங்காநத்ததம் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் விரைந்து சென்று பேச்சு நடத்தியதை அடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com