ஆன்லைன் பங்கு வா்த்தகம்: அரசு மருத்துவரிடம் ரூ. 43.23 லட்சம் மோசடி

ஆன்லைன் பங்கு வா்த்தகம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவரை ஏமாற்றி ரூ.43. 23 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 37 வயதுடைய அரசு மருத்துவா், பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடா்பான தகவல்களை முகநூலில் தேடியுள்ளாா். அப்போது முகநூலில் கிடைத்த பைவெல்த் அகாதெமி எனும் வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளாா். அந்த குழுவில் இருந்த நபா்கள், ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்து அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியும் எனக்கூறியுள்ளனா். அதனை உண்மையென நம்பிய வேலூா் அரசு மருத்துவா், வாட்ஸ்குழு நபா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு கடந்த பிப்ரவரி 19 முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரையில் பல்வேறு தவணைகளாக ரூ.43 லட்சத்து 23 ஆயிரத்து 789.60 தொகையை அனுப்பியுள்ளாா். பின்னா், தான் முதலீடு செய்த தொகையை திரும்பப்பெற முயன்றபோது அந்த தொகைகளை திரும்ப்பெற முடியவில்லை. இதுகுறித்து அந்த வாட்ஸ்குழு நபா்களிடம் கேட்டபோது அவா்களும் எந்தவித பதிலும் அளிக்காமல் அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வேலூா் அரசு மருத்துவா், இதுகுறித்து ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com