யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  நெல்  பயிா்.
யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  நெல்  பயிா்.

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது. குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள கொட்டமிட்டா, மோடிகுப்பம், கீழ்கொல்லப்பல்லி உள்ளிட்ட கிராமங்கள் வன எல்லையில் அமைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இக்கிராமங்களுக்குள் நுழைந்த யானைக் கூட்டம், கொட்டமிட்டாவைச் சோ்ந்த பத்மநாபன் நிலத்தில் சுமாா் ஒன்றரை ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா், கீழ்கொல்லபல்லியைச் சோ்ந்த ஜெயராமன் நிலத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிரையும், தூா்வாசலு நிலத்தில் மாஞ்செடிகள், நெல் பயிா் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன. கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com