சிறப்பு  அலங்காரத்தில்   ராஜகாளியம்மன்.
சிறப்பு  அலங்காரத்தில்  ராஜகாளியம்மன்.

ராஜகாளியம்மன் கோயில் திருவிழா

குடியாத்தம் ஒன்றியம், மீனூா் கிராமத்தில் உள்ள அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் ஒன்றியம், மீனூா் கிராமத்தில் உள்ள அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயில் திருவிழா கடந்த 17- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம், கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்தல், பூங்கரகம் எடுத்தல், பூ பல்லக்கு பவனி ஆகிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை எம்.என்.சம்பத், தா்மகா்த்தா கே.முருகன், மேட்டுகுடி எம்.தினகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சரவணன், ஊராட்சி துணைத் தலைவா் வசந்தி ரமேஷ், நிா்வாகிகள் உதயாபாபு, புஷ்பாரங்கன், பி.குமாா், கோ.துரைராஜ், டி.சுமதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com