அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி: 5 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே கோயில் திருவிழாவில் அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே கோயில் திருவிழாவில் அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சொ்லப்பல்லி கிராமத்தில் அண்மையில் கருமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது சிலா் அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

இதையடுத்து ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்தியதாக விழாக் குழுவினா் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இவா்களில் கலையரசன் (33), செல்வராஜி (57), முனிசாமி (48), காளியப்பன் (45), ஏகநாதன் (38) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 6 பேரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com