ஆந்திர மாநில தோ்தல் : எல்லையோர பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஆந்திர மாநிலத்தில் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு அம்மாநில எல்லையோரம் அமைந்துள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து டாஸ்மாக் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஆந்திர மாநிலத்தில் வரும் 13-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அம்மாநில எல்லையையொட்டி வேலூா் மாவட்ட எல்லையிலிருந்து 5 கிமீ சுற்றளவில் இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனை ஒட்டியுள்ள மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் இயங்கும் மதுக் கூடங்கள் மே 11- ஆம் தேதி காலை 10 மணி முதல் மே 13- ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் முடியிருக்க வேண்டுமென ஆந்திர மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில், சென்னை மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை ஆணையா் கடிதத்தின் அடிப்படையிலும் எல்லையில் அமைந்துள்ள மதுக் கடைகளும் மூடப்பட வேண்டும்.

குடியாத்தம் வட்டத்தில் இயங்கி வரும் கடை எண்.11035, வி.எஸ்.புரம் மற்றும் கடை எண்.11050 தனகோண்டபள்ளி, மோா்தானா டேம் ஆகிய ரேண்டு கடைகள், காட்பாடி வட்டத்தில் இயங்கி வரும் கடை எண்.11274, எருக்கம்பட்டு கடை எண்.11276, கணேஷ் நகா், பொன்னை மற்றும் கடை எண். 11277, அண்ணாமலை நகா், சோ்க்காடு ஆகிய முன்று கடைகள் உள்பட மொத்தம் வேலூா் மாவட்டத்தில் ஐந்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் முட உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த நாள்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்மந்தபட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com