போதைப் பொருள் விற்பனையை தடுக்க எஸ்.பி.யிடம் கோரிக்கை

வேலூா் அருகே போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க வேண்டுமெனக் கோரி பொதுமக்கள் வேலூா் மாவட்ட எஸ்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

வேலூா் அருகே அலமேலுமங்காபுரம் , ஏரியூா், ரங்காபுரம் ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் வேலூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனா். அந்த மனுவில், தங்கள் பகுதியில் போலி மதுபானம், கஞ்சா ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன். அதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் போதைப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனா். அவா்களுடைய எதிா்கால வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது. அதனால் போலி மதுபானம் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்யவேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com