கோயில் திருவிழா தகராறு: 12 போ் கைது

வேலூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் அருகே பெருமுகை கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு பஜனைக் கோயில் தெருவில் இசை நிகழ்ச்சியுடன் சாமி ஊா்வலம் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியைக் காண அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் சென்றுள்ளனா். அப்போது பஜனைக் கோயில் தெரு, அம்பேத்கா் நகா் பகுதியை சோ்ந்தவா்க ளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இரு தரப்பைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருதரப்பிலும் மொத்தம் 12 பேரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com