மேல் ஆலத்தூா்  கீழ்பாலத்தில்  குளம் போல் தேங்கியுள்ள  மழை நீா்.
மேல் ஆலத்தூா்  கீழ்பாலத்தில்  குளம் போல் தேங்கியுள்ள  மழை நீா்.

ரயில்வே கீழ்பாலத்தில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

குடியாத்தம் அருகே ரயில்வே கீழ்பாலத்தில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்கு ஆளாயினா்.

குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூா் அருகே பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்க கீழ்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக மேல்ஆலத்தூா், கூடநகரம், சிங்கல்பாடி, கொத்தகுப்பம், பட்டு, அணங்காநல்லூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் செல்கின்றனா்.

குடியாத்தம் பகுதியில் சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில்வே கீழ்பாலத்தில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. மழைநீரை அகற்ற பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டாா் பழுது காரணமாக நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் இந்த பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com