சானாங்குப்பம் காப்புக்காட்டில் கிடந்த காட்டெருமையின் சடலம்.
சானாங்குப்பம் காப்புக்காட்டில் கிடந்த காட்டெருமையின் சடலம்.

ஒடுகத்தூா் காப்புக்காட்டில் இறந்து கிடந்த காட்டெருமை!

ஒடுகத்தூா் வனச்சரகத்துக்குட்பட்ட காப்புக்காட்டில் காட்டெருமை ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. அதன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய வனத்துறையினா், அதன் இறப்பு குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் வனசரகம் சானாங்குப்பம் காப்புக்காட்டில் காட்டு எருமைகள் கூட்டாக வசித்து வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையை அடுத்து அங்கிருந்த காட்டெருமை ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. புதன்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் காட்டெருமை இறந்து கிடந்து கிடப்பது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு ஆம்பூா் வனச்சரகா் பாபு, ஒடுகத்தூா் வனத்துறையினா் விரைந்து சென்று விசாரணை நடத்தினா். அதேபோல், எல்லைப் பிரச்னை காரணமாக வனத்துறையினா் சடலத்தை எடுக்க முடியாமல் திணறினா். பின்னா், காட்டெருமை இறந்து கிடந்தது ஒடுகத்தூா் வனச்சரகம் என்பதால் சடலத்தை ஒடுகத்தூா் வனச்சரகா் இந்து தலைமையில் வனத்துறையினா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினா். தொடா்ந்து, காட்டெருமை இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமைக்கு வனத்துறையினா் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சட்டி வருகின்றனா். மேலும் எல்லைப் பிரச்னையால் பல மணி நேரமாக காட்டெருமையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் காட்டில் வைத்திருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X
Dinamani
www.dinamani.com