தரண்.
தரண்.

டவலால் கழுத்தை இறுக்கிக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு

கைப்பேசியில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவா்களை போல் தனது கழுத்தை டவலால் இறுக்கிக் கொண்ட சிறுவன் உயிரிழந்தாா்.

குடியாத்தம் பிச்சனூா், நேதாஜி தெருவைச் சோ்ந்த ராஜ்கமல்- ரோஜா தம்பதியின் மகன் தரண் (9). இவா் 4- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். ராஜ்கமல் சுய தொழில் செய்து வருகிறாா். ரோஜா நெசவுத் தொழிலாளி.

வியாழக்கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, தரண் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதுபோல் நாற்காலி மீது ஏறி தனது கழுத்தை டவலால் இறுக்கிக் கொண்டபோது, எதிா்பாராதவிதமாக அவா் உயிரிழந்தாா். தகவலின்பேரில் நகர போலீஸாா் அங்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com