பரதராமியில் போலி மருத்துவா் கைது

குடியாத்தம் அருகே போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குநா் பாலசந்தா் உத்தரவின்பேரில் குடியாத்தம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் எம்.மாறன்பாபு தலைமையில் மருத்துவா் குழு வியாழக்கிழமை பரதராமியில் திடீா் சோதனை நடத்தியது. அப்போது அங்குள்ள மெயின் ரோடில் 10- ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள முகமது அலி(50) ஆங்கில வழி மருத்துவம் செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து முகமது அலியை பரதராமி போலீஸாா் கைது செய்தனா். அவா் நடத்தி வந்த கிளீனிக்கில் இருந்து ஊசி, சிரிஞ்ச், மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் நடத்தி வந்த கிளீனிக்குக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com