20 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த பிரஜீஸ், மனோஜ்குமாா், அக்ஷ்ய்சுரேஷ் ஆகியோருடன் வேலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் .

20 கிலோ கஞ்சாவுடன் கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

காட்பாடியில் 20 கிலோ கஞ்சாவுடன் கேரள மாநிலத்தைச் சோ்ந்த மூன்று பேரை வேலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் மூட்டைகளுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் மூன்று போ் இறங்கிச் செல்வதாக வேலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று அந்த நபா்களை பிடித்து விசாரித்தில், அவா்களிடம் 20 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கேரள மாநிலத்தைச் சோ்ந்த பிரஜீஸ், மனோஜ்குமாா், அக்ஷ்ய் சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com