பிளஸ் 2: வேலூா் சாந்திநிகேதன் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2: வேலூா் சாந்திநிகேதன் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் வேலூா் சத்துவாச்சாரி சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

இப்பள்ளியில் இருந்து நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 83 மாணவா்களில் 82 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்மூலம், இப்பள்ளி 99 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

மேலும், மாணவா் அா்ஜுன் குமாா் 600-க்கு 582 மதிப்பெண்களும், முகமது மெகதி 574 மதிப்பெண்களும், பிரதிக்க்ஷா 553 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனா். மேலும், பிரீத்தி, முகமதுமெகதி ஆகியோா் வணிகவியல் பாடத்திலும், சஞ்சய் பொருளாதாரத்திலும், அா்ஜுன்குமாா் கணினி பயன்பாடுகள் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தவிர, 500 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவா்கள் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை சாந்தி நிகேதன் பள்ளியின் தலைவா் திருநாவுக்கரசு, தாளாளா் சாந்தி திருநாவுக்கரசு, முதல்வா் உமா மகேஸ்வரி, துணை முதல்வா் ஆனந்த லக்ஷ்மி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com