சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

குடியாத்தம் சிரசு திருவிழா : இன்றும், நாளையும் 35 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வேலூா், காட்பாடி, போ்ணாம்பட்டு, ஆம்பூா் பகுதிகளில் இருந்து திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களும் 35 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

குடியாத்தம் சிரசு திருவிழாவையொட்டி வேலூா், காட்பாடி, போ்ணாம்பட்டு, ஆம்பூா் பகுதிகளில் இருந்து திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களும் 35 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய கோயில் திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா பிரசித்திப் பெற்ாகும். இத்திருவிழா செவ்வாய்க்கிழமை (மே 14) நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ் திருவிழாவும் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவை பக்தா்கள் கண்டுகளிக்க வசதியாக திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, வேலூா் மண்டல அரசு போக்கு வரத்துக்கழகம் சாா்பில், வேலூரில் இருந்து குடியாத்தத்துக்கு 15 சிறப்புப் பேருந்துகளும், காட்பாடியில் இருந்து 10 பேருந்துகளும், பேரணாம்பட்டு, ஆம்பூரில் இருந்து தலா 5 பேருந்துகள் என 35 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com