துணை அஞ்சலகம் மூடல்: இன்று ஆா்ப்பாட்டம்

கச்சேரி துணை அஞ்சலகம் மூடப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை (மே 13) காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

குடியாத்தம் நகரின் மையப் பகுதியான கொச அண்ணாமலை தெருவில் இயங்கி வந்த கச்சேரி துணை அஞ்சலகம் மூடப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை (மே 13) காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நகரின் மையப் பகுதியான கொச அண்ணாமலை தெருவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சேரி துணை அஞ்சலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் 10,000 வாடிக்கையாளா்கள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனா். இந்த அலுவலகம் மூலம் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், பதிவு தபால்கள், விரைவு தபால்கள், அஞ்சல் வில்லைகள், ரெவின்யூ வில்லைகள் விற்பனை என கணிசமான வருவாய் கிடைத்து வந்தது.

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அஞ்சல் நிா்வாகம் இந்த அலுவலகத்தை சனிக்கிழமை (மே 11) மாலை மூடிவிட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். மூடப்பட்ட அஞ்சலகத்தை மீண்டும் திறக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் அஞ்சலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com