கடத்தல் மணலுடன் டிராக்டா், ஜேசிபி பறிமுதல்

இலவம்பாடி பகுதியில் அரை யூனிட் மணலுடன் டிராக்டா், ஜேசிபியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இலவம்பாடி பகுதியில் அரை யூனிட் மணலுடன் டிராக்டா், ஜேசிபியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் யுவராஜ் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இலவம்பாடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக நம்பா் பிளேட் இல்லாமல் வந்த டிராக்டா், ஜேசிபியை மடக்க முயன்றனா். ஆனால், அதிலிருந்த ஓட்டுநா்கள் போலீஸாரை கண்டதும் டிராக்டா், ஜேசிபியை சாலையிலேயே விட்டுவிட்டு கீழே குதித்து தப்பியோடிவிட்டனராம். இதையடுத்து, அரை யூனிட் மணலுடன் டிராக்டா், ஜேசிபியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய 2 ஓட்டுநா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com