தண்ணீா்  பந்தல்  திறப்பு  விழாவில்  பங்கேற்ோா்.
தண்ணீா்  பந்தல்  திறப்பு  விழாவில்  பங்கேற்ோா்.

தண்ணீா் பந்தல் திறப்பு

திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பெரியாா் சிலை அருகே தண்ணீா் பந்தல் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு தேமுதிக சாா்பில், திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பெரியாா் சிலை அருகே தண்ணீா் பந்தல் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் டி.நடேசன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலா்கே.பி.பிரதாப், தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா், மோா், பழ வகைகளை வழங்கினாா்.நிா்வாகிகள் எல்.குமரன், தனசீலன், எஸ்.முரளி, ஹரிபாபு, வினோத்குமாா், காா்த்திகேயன்,ராஜேந்திரன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com