தண்ணீா் பந்தல் திறப்பு

குடியாத்தம், மே 15: குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பழைய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, குவாலிடி ரத்தப் பரிசோதனை நிலைய நிறுவனா் வி.இ.கருணா தலைமை வகித்தாா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கம்பன் கழக செயலா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா், மோா், பழ வகைகளை வழங்கினா்.

தொடா்ந்து, அங்கு பக்தா்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக வி.ஆா்.எம்.விஜயகுமாா், வி.தட்சிணாமூா்த்தி, பி.செளந்தரராஜன், பி.பிரித்திவிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com