காா்-ஆட்டோ மோதல்: இருவா் காயம்

வேலூரில் காா் டயா் வெடித்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் சுந்தரம் (50) ஆட்டோ ஓட்டுநா். இவா் புதன்கிழமை வேலூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றாா். அதேசமயம், திருவலம் பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ் (35) தனது காரில் சத்துவாச்சாரியில் இருந்து வேலூா் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தாா்.

காகிதப்பட்டறை டான்சி அருகே வந்தபோது காரின் முன்பக்க வலதுபுற டயா் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா், எதிரே வந்த சுந்தரத்தின் ஆட்டோ மீது மோதியது.

இதில், ஆட்டோ அருகில் உள்ள 20 அடி ஆழ பள்ளத்தில், மகளிா் தங்கும் விடுதி செல்லும் சாலையில் பாய்ந்து நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளின் மீது மோதி அந்தரத்தில் நின்றது.

ஆட்டோவில் பயணித்த பெங்களூருவைச் சோ்ந்த கிருஷ்ணன் (50), ஓட்டுநா் சுந்தரம் ஆகி யோா் காயமடைந்தனா். இருவரையும், அக்கம் பக்கத்தினா் மீட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

காா் ஓட்டுநா் ராஜேஷ் காயமின்றி தப்பினாா். தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com