பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பொன்னை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம் காட்பாடி வட்டம், பொன்னை கிராமத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன் ரமேஷ் (30). இவா் பொன்னை அடுத்த பரமசாத்து பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 2-ஆம்தேதி ரமேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் பொன்னை - சித்தூா் சாலையில் உள்ள உணவகத்துக்கு உணவு வாங்க சென்றிருந்தாா்.

அதேசமயம், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சோ்ந்த சாய்கிருஷ்ணா (35) என்பவா் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனா். பரமசாத்து அடுத்த தெங்கால் பகுதியில் வந்தபோது ரமேஷ் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது சாய்கிருஷ்ணா ஓட்டி சென்ற காா் மோதியது.

இந்த விபத்தில் ரமேஷ் பலத்த காயமடைந்தாா். பொன்னை போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் அவா் உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி ரமேஷ் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பொன்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com