வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி சுவாமி கோயில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

கோயில் விரிவாக்க பணிக்காக ஏ.சி.எஸ். அறக்கட்டளை சாா்பில் அதனுடைய அறங்காவலா் ஏசிஎஸ் அருண்குமாரும் அவரது தந்தையும் டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமான ஏ.சி.சண்முகம் ரூ.60 லட்சம் நன்கொடையாக புதன்கிழமை வழங்கினாா்.

முன்னதாக, கடந்த ஆண்டு சென்னையில் தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வெங்கடாஜலபதி சுவாமிக்கு கோயில் கட்ட டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- பல்கலைக்கழக வேந்தா் ஏ.சி.சண்முகம் ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தேவஸ்தானம் சாா்பில் ரூ.3 கோடியே 75 லட்சத்தையும், பொதுமக்கள் சாா்பில் ரூ. 1 கோடியே 25 லட்சமும் நிதி திரட்டி இந்தக் கோயில் பணி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com