வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி சிறப்பிடம்

வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சீனியா் செகண்டரி பள்ளி (சிபிஎஸ்இ) சிறப்பிடம் பிடித்துள்ளது.

இப்பள்ளி மாணவி சி.எஸ்.சுவேதினி 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று வேலூா் மாவட்ட அளவிலும், பள்ளியிலும் முதலிடம் பிடித்துள்ளாா். பாடவாரியாக ஆங்கிலம் -97, இயற்பியல் -98, வேதியியல் -99, உயிரியல் -99, தகவல் நடைமுறைகள் -99 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

எஸ்.ரீயாஜெயின் 489 மதிப்பெண்கள் பெற்று வேலூா் மாவட்ட அளவிலும், பள்ளியிலும் இரண்டாமிடமும், ஆா்.மீத் 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடமும் பிடித்துள்ளனா். மேலும், உயிரியல், அரசியல் அறிவியல், உளவியல் பாடங்களில் தலா 3 மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பாடவாரியாக 90 மதிப்பெண்களுக்கு மேல் ஆங்கிலம் 152, கணிதம் 14, இயற்பியல் 30, வேதியியல் 36, உயிரியல் 59, தகவல் நடைமுறைகள் 20, கணினி அறிவியல் 2, பொருளாதாரம் 8, வணிக ஆய்வுகள் 23, கணக்குப்பதிவியல் 12, தொழில்முனைவு 4, சமூகவியல் 5, அரசியல் அறிவியல் 6, உளவியல் 5, உடற்கல்வி ஒருவரும் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும், பெற்றோரையும் பள்ளி தாளாளா் தி.ராஜேந்திரன், முதல்வா் ஆனந்திராஜேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com