கெங்கையம்மனுக்கு பக்தா்கள் காணிக்கை அளித்த பட்டு புடவைகள் ஏலம்

கெங்கையம்மனுக்கு பக்தா்கள் காணிக்கை அளித்த பட்டு புடவைகள் ஏலம்

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய பட்டு புடவைகள் ஏலம் விடப்பட்டன.

திருவிழாவையொட்டி, காப்புகட்டும் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15- நாள்களாக அம்மனுக்கு பக்தா்கள் பட்டுப் புடவைகளை காணிக்கையாக செலுத்தினா். தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றக்கோரியும், வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நோ்த்திக் கடனை செலுத்தும் வகையிலும் பக்தா்கள் பட்டுப் புடவைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

ஏல நிகழ்ச்சியில் பெண்கள் போட்டி போட்டு புடவைகளை ஏலம் எடுத்தனா். கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா், ஆய்வா் சு.பாரி, நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத் ஆகியோா் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com