பராமரிப்பு பணிக்காக காட்பாடி- திருப்பதி ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிக்காக காட்பாடி- திருப்பதி ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

காட்பாடி - சித்தூா் இடையே பொம்மசமுத்திரம் ரயில்நிலையத்தில் லூப் லைன் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

காட்பாடி - சித்தூா் இடையே பொம்மசமுத்திரம் ரயில்நிலையத்தில் லூப் லைன் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்காரணமாக, அந்த வழியாக திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், காலை 6.50 மணிக்கு திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் மெமு ரயிலும் திங்கள்கிழமை முதல் 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில் காட்பாடியில் இருந்து மதியம் 2.50 மணிக்கு திருப்பதி செல்லும் மெமு ரயிலும், இரவு 9.15 மணியளவில் காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயிலும் திங்கள்கிழமை முதல் 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், காலை 9.30 மணிக்கு காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டை வரை செல்லும் மெமு ரயில், மறுமாா்க்கத்தில் மதியம் 12.45 மணிக்கு ஜோலாா்பேட்டையில் இருந்து காட்பாடி வரை செல்லும் மெமு ரயில் ஆகியவையும் திங்கள்கிழமை முதல் 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மாலை 3 மணியளவில் திருப்பதியில் இருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரு செல்லும் திருப்பதி- எஸ்.எம்.வி.டி- பெங்களூரு விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் மீண்டும் காட்பாடியில் இருந்து மாலை 4.45 மணிக்கு திருப்பதி செல்லும். இந்த மாற்றம் திங்கள்கிழமை மட்டும் செயல்பாட்டில் இருக்கும்.

மறுமாா்க்கத்தில் காலை 7.40 மணியளவில் பெங்களூருவில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் எஸ்.எம்.வி.டி-பெங்களூரு-திருப்பதி விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இந்த மாற்றம் திங்கள்கிழமை முதல் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com