மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டா் உயிரிழப்பு

வேலூா் அருகே உடலில் மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டா் உயிரிழந்தாா்.
Published on

வேலூா் அருகே உடலில் மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், இறைவன்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52), பம்ப் ஆப்பரேட்டா். அவ்வப்போது மின்வாரிய ஊழியா்கள் அழைப்பின்பேரில், எலெக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், விரிஞ்சிபுரம் பாலாற்றங்கரையோரம் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்குவதற்காக திங்கள்கிழமை மாலை ரவிச்சந்திரனை மின்வாரிய ஊழியா்கள் அழைத்துச் சென்ாகத் தெரிகிறது. மின்மாற்றியில் ஏறி ரவிச்சந்திரன் பழுதை நீக்கியபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக, வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.