வீட்டில் மது புட்டிகள் பதுக்கியவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் மது புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் மது புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மத்தூா் கிராமத்தில் வீரபாண்டியன் (37) என்பவா் வீட்டில் மது புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. சோதனையில் அவரது வீட்டிலிருந்து மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com